உள்ளூர் செய்திகள்

ஆப்பிள் மூலம் பாடம்!

கிரேக்க நாட்டின் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர் சாலன்.ஒருநாள், தனது கையிலே அழுகிய ஆப்பிள் ஒன்றை வைத்தபடி, ''புதிய ஆப்பிளாக இதை எப்படி மாற்றலாம்?'' என்று மக்களை பார்த்துக் கேட்டார்.மக்கள் அவரை ஆச்சரியமாகப் பார்த்துவிட்டு, ''அழுகிப்போன ஆப்பிள் பழத்தைத் தூக்கி எறிய வேண்டியதுதான்,'' என்று கூறினர்.அப்போது சாலன் ஒரு கத்தியால் அந்த அழகிய ஆப்பிள் பழத்தைச் சில பாகங்களாக வெட்டிவிட்டு அதிலிருந்த விதைகளை மட்டும் வெளியில் எடுத்தார்.அதன்பிறகு மக்களைப் பார்த்து, ''இதோ இந்த விதைகள் நன்றாகத்தான் உள்ளன. இவற்றை விதைப்பதன் மூலம் புதிய ஆப்பிள் மரங்களைக் கொண்டு வரலாமல்லவா!'' என்று கேட்டார்.சிந்தனையாளர் சாலனின் அறிவை கண்டு மக்கள் வியந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !