உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு !

அனைவருக்கும் எனது அன்பு!

கார்டு வுட்டா காசு... !

உலகின் முதல் ஏ.டி.எம்., இயந்திரத்தை கண்டு பிடித்தவர் ஜான்ஷெப்பர்டு பரோன். முன்பெல்லாம் முதல் தேதி ஆனா பஸ்சில் சம்பளப்பணத்தை திருடும் பிக்பாக்கெட்காரர்கள் ஏராளம். இவர்களிடம் இருந்து நாம் தப்பிக்க உதவியது இந்த ஏ.டி.எம்.,இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாந்தை சேர்ந்தவர். 1965-ம் ஆண்டு ஏ.டி.எம்., இயந்திரத்தை இவர் கண்டுபிடித்தார்.அப்போது அவர் அச்சு தொழில் செய்து வந்தார். பாங்கிக்கு சென்றபோது பணம் பெற அவருக்கு மிகவும் காலதாமதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு வங்கியை தவிர வேறு எந்த இடத்திலும் பணம் பெறும் வசதியுடைய ஏ.டி.எம்., இயந்திரத்தை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.அதை தொடர்ந்து ஏ.டி.எம்., இயந்திரத்தை அவர் வடிவமைத்தார். இவர் தயாரித்த இயந்திரம் 1967-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி வடக்கு லண்டனில் உள்ள பார்கிளேஸ் வங்கி கிளையில் பொருத்தப்பட்டது. அப்போது பிளாஸ்டிக் கார்டு கண்டுபிடிக்கவில்லை. ரசாயன குறியிடப்பட்ட சிறப்பு செக் மற்றும் தனி அடையாள குறியீட்டு நம்பர் மூலமும் இயக்கப்பட்டு பணம் பெறப்பட்டது.தொடக்கத்தில் ஆறு இலக்க அடையாள குறியீட்டு நம்பரை பதிவு செய்யும் வகையில் அவர் வடிவமைத்து இருந்தார். பின் நான்கு இலக்காமாக குறைத்து வடிவமைத்தார்.

விவசாயிகள் கார் வாங்க க்யூவில் ... !

விவசாயிகள் பற்றி மிக மிக நல்ல செய்தி படித்து ஆனந்தப்படுங்கள்.இப்போது ஆந்திர மஞ்சள் விவசாயிகளுக்கு எப்போதும் இல்லாத அளவு ஜாக்பாட் அடித்து கொண்டிருக்கிறது.ஆளாளுக்கு லேட்டஸ்ட் ரக கார்களுக்கு புக்கிங் செய்வதில் போட்டி போட்டு கார் ஏஜன்சிகளில் கியூவில் நிற்கின்றனர்.மகசூலில் நிரம்பி வழியும் பணத்தை கொண்டு தங்கத்தை வாங்குகின்றனர். இன்னும் சிலரோ மனை வாங்கி போடுகின்றனர். ஆந்திர மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் மற்ற விவசாயிகளைவிட, மஞ்சள் விவசாயிகளுக்கு இந்தாண்டு மகசூல் மட்டுமல்ல, வருமானமும் கொட்டோ கொட்டு என்று கொட்டி வருகிறது.இதற்கு காரணம், மஞ்சளுக்கு பல மாநிலங்களில் கிராக்கி அதிகரித்ததுதான்.குவிண்டால் 17 ஆயிரத்தை தொட்டு விட்டதால், அவர்களுக்கு ஏற்பட்ட குஷிக்கு அளவே இல்லை. விவசாயத்தை ஆரம்பித்த நாளில் இருந்து சுளையாக சில நூறு ரூபாய் நோட்டுக்களை கூட பார்க்காத சாதா விவசாயிகள், இந்தாண்டு கூரையை பிய்த்து கொண்டு பணம் கொட்டியதை பார்த்து வியப்பின் உச்சிக்கே சென்று விட்டனர்.பணத்தை வழக்கம் போல் யாரிடமாவது தந்து ஏமாற இப்போது அவர்கள் தயாரில்லை. நகரத்து மக்களை போல தாங்களும் வசதியாக வாழ வேண்டும், எல்லா வசதிகளையும் அனுபவிக்க வேண்டும் என்று கிராம மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டனரே.நிஜாமாபாத் மஞ்சள் விசாயிகள் உள்ள கிராமங்களில் இப்போது பிரபல விவசாயிகள் குவிந்து விட்டனர். மூன்று வழியில்தான் இந்த விவசாயிகள் பணத்தை செலவிட முன் வந்துள்ளனர். பலரும் கார் வாங்க முன்வந்துள்ளனர்.கடந்த மூன்று மாதங்களில் 700 லேட்டஸ்ட் கார்களுக்கு இந்த விவசாயிகள் முன் பணம் கட்டியுள்ளனர். சில விவசாயிகள், மாவட்ட தலைநகரில் முக்கிய பகுதிகளில் மனைகளை வாங்கி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்னும் சிலர், தங்க நகைகள் வாங்கி வருகின்றனர். பதினேழு ஏக்கர் நிலம் உள்ள விவசாயி ஒருவர் இரண்டரை ஏக்கரில் மட்டும் மஞ்சள் கிழங்கு பயிரிட்டார். அதில் அவருக்கு லாபம் மட்டும் ஏழு லட்சம் கிடைத்தது. இதுபோல பலருக்கும் ஐந்து லட்சத்தில் இருந்து ஐம்பது லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைத்துள்ளது. இப்போதே சிலர், சூப்பர் கார்களில் வலம் வர ஆம்பித்து விட்டனர். நகரில் உள்ள மாத சம்பளதாரர்கள், சிறிய வியாபாரிகள் இவர்களை பார்த்து மூக்கில் விரலை வைக்கின்றனர். அனைத்து விவசாயிகளும் ஆனந்தமாய் வாழ வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திப்போம்.

செகண்டு-சீனா

உலகின் அதிவேக கம்ப்யூட்டர்களில் சீனாவின் சமீபத்திய தயாரிப்புக்கு இண்டாவது இடம் கிடைத்துள்ளது. அறிவியல் ஆராய்ச்சி பொறியியலில் சூப்பர் கம்ப்யூட்டர்கள் பயன்படுகின்றன. அமெரிக்காவின் டென்னீசை சேர்ந்த கிரே ஜாகர் கண்டு பிடித்த சூப்பர் கம்ப்யூட்டர், உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டராக நீடிக்கிறது.

கலாம் காலம்

சீனா சமீபத்தில் தயாரித்த கம்ப்யூட்டர், ஐரோப்பா, ஜப்பான் தயாரிப்புகளை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடம்பிடித்தது. இந்திய அரசில் உயர் பதவி வகித்து நேர்மையினாலும், மக்கள் மீதும் குழந்தைகள் மீதும் அன்பு செலுத்துவதினாலும், ஒரு ஒப்பற்ற ஜனாதிபதியாக இந்திய மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நம் அப்துல் கலாம் அவர்கள். இவரது நேர்மையான செயல்பாடு இவர் மீண்டும் ஜனாதிபதியாவதற்கு நேர்மையற்ற சில அரசியல்வாதிகளால் தடையாகி போனது.மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தைகளுக்கு வீரத்தையும், நேர்மையையும், தேச பக்தியையும் கற்பித்து உற்சாகத்துடன் செயலாற்றிவரும் அன்பு கலாம் அவர்கள் மதுரை மீனாட்சி மருத்துவமனையில் நடைபெற்ற ஸ்மைல் டிரையின் 10 ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டார்.அங்கு உதடுபிளவு அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தைகளை சந்தித்து மகிழ்ந்தார். அத்துடன் ஆயிரக்கணக்கான பேருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் பஞ்சவர்ணத்தை மேடையேற்றி பாராட்டி, "ஐந்தாயிரம் பேருக்கு ஆபரேஷன் செய்த கைகளை காட்டுங்கள்' என்று அவரது கைகளை பற்றி, "இந்த கைகள் தானே இத்தனை குழந்தைகளையும் மகிழ்ச்சியுடன் சிரிக்க வைத்தது' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.அங்கிருந்த அனைவரும் நமது பாசத்துக்குரிய முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாமை பாராட்டி கைதட்டி மகிழ்வுடன் பெருமிதப்பட்டனர். குழந்தைகள் மேல் ஏராள அன்பு உள்ள பெற்றோர், ஆசிரியர், பெரியோர் அருகில் இருக்கும்போது ஒரு தெய்வீக ஆனந்தம் ஏற்படும்.  உள்ளம் நிரம்பிய அன்பு + தேச பக்தி கொண்ட அப்துல் கலாம் அவர்கள் பார்க்கும் போதே நமக்கு ஆனந்தமும், தன்னம்பிக்கையும், அன்பும் பெருக்கெடுக்கிறதே!அன்புடன், அங்குராசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !