மேனி மினுமினுப்பு!
பொதுவாக, கொத்தமல்லியை சமையலில் இறுதியில் வாசனைக்காக சிறிதளவு பயன்படுத்துவர். இப்படி இறுதியில் பயன்படுத்தப்பட்டாலும், இவற்றால் கிடைக்கும் பலன் என்னவோ அதிகம்தான். கொத்தமல்லி கீரை வகையை சார்ந்தது. இதை வீட்டு தோட்டத்திலும் வளர்க்கலாம்; சிறு தொட்டியிலும் வளர்க்கலாம். இவற்றில் கால்ஷியம், இரும்பு, வைட்டமின் ஏ,பி,சி, பாஸ்பரஸ் போன்றவை அடங்கியுள்ளன. இது பார்வை கோளாறு, ரத்த சோகை போன்றவற்றை போக்க வல்லது. மேலும், வாதம், பித்தத்தை போக்கும். உடல் பலம் பெறும். பசியைத் தூண்டும். தினமும் இதை உணவில் சேர்த்து கொண்டால், சிறுநீர் எளிதாக பிரியும். பல் சம்பந்தமான எல்லா நோய்களையும் குணமாக்கும். முதுமையில் ஏற்படும் தோல் சுருக்கத்தை போக்கி, தேகத்திற்கு அழகையும், மினுமினுப்பையும் தரும்!