உள்ளூர் செய்திகள்

ஆசான் சொல்!

கோவை மாவட்டம், சிங்காநல்லுார், அரசு உயர்நிலைப் பள்ளியில், 1965ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு...தமிழாசிரியராக இருந்தார் ராமசாமி. தவறாமல் கதர் ஆடை அணிந்திருப்பார். கண்டிப்பும், கனிவும் மிக்கவர். மற்ற ஆசிரியர்கள் பிரம்படி தருவர். இவர் கையால் அடிப்பார். சக மாணவர்கள் விளையாடும் போது, விழுந்து அடிபட்டால் உடனடியாக முதலுதவி செய்வேன். காயம்பட்டு இருந்தால் மிதிவண்டியில் அமர வைத்து, இலவச மருத்துவர் புன்னைவனத்திடம் சிகிச்சைக்கு அழைத்து செல்வேன். அனுமதி பெறாமல் அழைத்து சென்றதற்காக, ஆசிரியர்களிடம் பலமுறை அடி வாங்கியுள்ளேன். என் சேவை அறிந்து, 'மருத்துவர் ஜெகதீஸ்வரன்' என்றே பெருமையுடன் அழைத்து வந்தார் தமிழாசிரியர். படிப்பை முடித்த பின், கண்தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தினேன். இதில், 7 ஆயிரத்து, 386 கண்கள் தானமாக பெற துாண்டுதலாக இருந்தேன். இதற்காக, அமெரிக்காவில் உள்ள அமைப்பு, டாக்டர் பட்டம் வழங்கி, பிப்., 19, 2022ல் கவுரவித்தது. எனக்கு, 69 வயதாகிறது. பார்சல் சர்வீஸ் தொழில் நடத்தி வருகிறேன். ஆசான் சொல் பலிக்கும் என்பதற்கு இணங்க எனக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு துாண்டுகோலாக இருந்தவரை போற்றி வணங்குகிறேன்.- எஸ்.பி.ஜெகதீஸ்வரன், கோவை.தொடர்புக்கு: 94432 63868


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !