முருங்கை கீரை சாதம்!
தேவையான பொருட்கள்:முருங்கை கீரை - 3 கப்சாதம் - 2 கப் வேர்க்கடலை - 1 கப்தேங்காய் - 4 துண்டுபெரிய வெங்காயம் - 100 கிராம்கடலை எண்ணெய் - 1 தேக்கரண்டிஉப்பு, கடுகு, வரமிளகாய், கடலை, கறிவேப்பிலை - தேவையான அளவு.செய்முறை:வாணலியில், எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளிக்கவும். அதில், நறுக்கிய வெங்காயம் சேர்த்து, நன்கு வதக்கவும். பின், வறுத்த வேர்க்கடலையை சேர்த்து கிளறவும். இந்த கலவையில், முருங்கை கீரை சேர்த்து வேகவிடவும். வெந்ததும், துருவிய தேங்காய் சேர்த்து, கிளறவும். அதில், உதிரியான சாதம், உப்பு சேர்த்து, நன்கு கிளறி இறக்கவும். சுவைமிக்க, 'முருங்கை கீரை சாதம்' தயார்.முருங்கைக்கீரை ரத்தத்தை சுத்தம் செய்யும்; வேர்க்கடலை புரதச்சத்து நிறைந்தது. இந்த உணவு, நெஞ்சில் தங்கும் சளியை நீக்கும். சிறுவர், சிறுமியருக்கு அடிக்கடி கொடுக்கலாம்.- ஜி.கமலா, திருப்பூர்.தொடர்புக்கு: 96004 94859