மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!
தேவையானவை: மைதா - 1 கப், ஈரம் இல்லாத புதினா - 1 கட்டு, இஞ்சி - 50 கிராம், பூண்டு - 4 பல், ஓமம் - அரை தேக்கரண்டி, தேவையான உப்பு சேர்த்து இவற்றை அரைக்கவும்.செய்முறை: அரைத்த விழுதுடன், மைதா மாவை சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பின், பிசைந்த மாவை சப்பாத்தி போன்று மெலிதாக உருட்டி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் பொரித்து எடுத்தால், 'சிப்ஸ் ரெடி' அத்துடன், மிளகுப் பொடி சேர்த்து சாப்பிட்டால் மொறுமொறுன்னு சூப்பரா இருக்கும்.கிரீம் பிஸ்கட் கொடுத்து உங்க செல்லங்களை கெடுக்காமல், இந்த சிப்ஸை, 'ஸ்நாக்ஸ்' ஆ கொடுங்க!இது மிகவும் ஆரோக்கியமானது. இதை சாப்பிட்டால் நன்கு பசியெடுக்கும்; சீக்கிரம் ஜீரணம் ஆகும்; இளநரை பிரச்னைகள் கூட தீரும்.- எம்.பி.ராஜேஸ்வரி, பெரம்பூர்