மம்மீஸ் ஹெல்த் கிச்சன்...
கிரீனி... கிரீனி... வடா!செய்முறை: பச்சை பட்டாணி - 1 கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிதளவு, அத்துடன் உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்த பொருட்களுடன் கடலை மாவு - 2 டீஸ்பூன், அரிசி மாவு - 2 டீஸ்பூன் கலந்து சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால், ஐந்தே நிமிடங்களில், சுவையான பச்சை பட்டாணி வடை தயார்.உங்க குட்டீஸ்களுக்கு கொடுத்து அசத்துங்கள். இது மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இவற்றில், வைட்டமின் ஏ,சி,இ உள்ளது. இதயத்திற்கு மிகவும் நல்லது; ஞாபக சக்தி அதிகரிக்கும்.-என்.சாந்தி, கொளத்தூர்.