மம்மீஸ் ஹெல்தி கிச்சன்!
சாமை கீரை தோசை! தேவையான பொருட்கள்: முருங்கை கீரை – 1 கப் சாமை அரிசி -– 1 கப் உளுந்து –- கால் கப் சீரகம், மிளகு, வெந்தயம் -– சிறிதளவு உப்பு, எண்ணெய், தண்ணீர் –- தேவையான அளவு. செய்முறை: சாமை அரிசி, உளுந்தை சுத்தம் செய்து தண்ணீரில், 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின் வெந்தயம், சீரகம், மிளகு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து உப்பு கலந்து, 6 மணி நேரம் புளிக்க விடவும். புளித்த மாவில் பொடியாக நறுக்கிய முருங்கை கீரையை கலக்கவும். தோசைக்கல் சூடானதும், எண்ணெய் தடவி மாவை ஊற்றி மொறு மொறுப்பான தோசையாக சுட்டு எடுக்கவும். சுவை மிக்க, ‘சாமை கீரை தோசை’ தயார். சத்துகள் நிறைந்தது. – ப.சோனியா, கோவை.