என் செல்ல மம்மி!
ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டு இருக்கிறேன். பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு அன்று பள்ளிக்கு வந்திருந்தார் அம்மா. மதிப்பெண் மிகவும் குறைவாக எடுத்திருந்தேன். என் மதிப்பீட்டு பட்டியலை காட்டினார் மிஸ். பதட்டத்தில் இருந்தேன்; நான் எடுத்த மதிப்பெண்னைப் பார்த்து என் மம்மி திட்டவில்லை.'இனி நன்றாக மதிப்பெண் எடுக்க வேண்டும்...' என்று கூறினார். ' வீட்டில், எவ்வளவு நேரம், 'டிவி' பார்க்கிறேன்...' என்று கேட்டர் மிஸ். 'அவ்வளவாக பார்க்க மாட்டாள்' என்று கூறினார். மேலும், அம்மாவிற்கு உதவி செய்வேன் என்றும், கூறினார்.'பரவாயில்லை... உங்க மகள் செய்யும் சிறிய உதவிகளை கூட, பெருமையாக கூறுகிறீர்; மற்ற பெற்றோர், 'வீட்டில் சொல் பேச்சு கேட்க மாட்டேங்கிறாங்கன்னு' குறைதான் சொல்கின்றனர்; நீங்களோ உங்கள் மகளை இவ்வளவு பெருமையா சொல்றீங்க...' என்று கூறினார்.அம்மா சென்ற பின், வகுப்பில், எல்லா மாணவியர் முன்னிலையிலும், என் அம்மா சொல்லியதை பெருமையாக கூறினார் ஆசிரியர்; எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.இதுபோல், எல்லா பெற்றோரும், பிள்ளைகள் செய்யும் நல்ல விஷயங்களை கூறினால், எங்களுக்கும் சந்தோஷமாக இருக்கும்; அதே சமயம் நாங்கள் செய்த தவறையும் உணர்வோம் அல்லவா...- இ.கலைச்செல்வி, விருதுநகர்.