வேப்பம் பூ துவையல்!
தேவையான பொருள்கள்: வேப்பம் பூ - 50 கிராம்; .வெல்லம் - 50 கிராம்; பச்சரிசி (வறுத்தது) - 10 கிராம்; மிளகாய் வற்றல் - 3 எண்ணிக்கை; பூண்டு - 3 பல்; உப்பு, புளி, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: முதலில் வேப்பம் பூவை சுத்தம் செய்து, எண்ணெய் விட்டு வதக்கவும். பிறகு மற்ற பொருள்களையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பயன்கள்: குழந்தைகளுக்கு வாரம் இருமுறை இந்தத் துவையலை கொடுத்து வந்தால் குடல்புழுக்கள் ஒழியும்; நல்ல பசி உண்டாகும். காலை உணவுடன் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். தோல் நோய் உள்ளவர்களுக்கு அந்தக் குறை தீரும். குடல் புண், பித்த நோய்களும் குணமாகும்.