நெல்லி மோர்!
தேவையான பொருட்கள்:மோர் - 1 கப்நெல்லிக்காய் - 2கறிவேப்பிலை, பெருங்காயத்துாள் - சிறிதளவுஉப்பு, தண்ணீர் - தேவையான அளவுசெய்முறை:நெல்லிக்காயை சுத்தம் செய்து, சிறிது தண்ணீர் ஊற்றி, ஐந்து நிமிடம் வேக வைக்கவும். வெந்த நெல்லிக்காயுடன், அரை கப் மோர், உப்பு, பெருங்காயத் துாள், கறிவேப்பிலை சேர்த்து, நைசாக அரைக்கவும்.பின், மீதமுள்ள மோரையும் சேர்த்து, நன்றாக கலக்கவும். மிகவும் சுவையான, 'நெல்லிமோர்' தயார். சத்துக்கள் நிறைந்தது. சிறுவர், சிறுமியர் விரும்பி குடிப்பர்.- ஜி.சுந்தரி, கடலுார்.