மினரல் வாட்டரல்ல!
மதிய வேளையின் போது சூடான, புழுதியான, வெப்ப நிலங்கள் வெகு அமைதியாக காணப்படும். சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தின்போதுதான் பறவைகள் தம் இடத்தை விட்டு வெளியே வந்து தண்ணீர் மற்றும் உணவை உட் கொள்ளும். காரணம், அப்போதுதான் காற்றும், நிலமும் குளிர்வாய் இருக்கும். எல்ப் ஆந்தைகள் அதிர்ஷ்டம் செய்தவை. அவைகள் ஈரமும், சதையும் கொண்ட இறைச்சியை உண்ணும். கொஞ்சம் கூட தண்ணீர் குடிக்க அவை களுக்கு தேவையில்லை. மணற்பகுதி கிரெஸ் என்னும் பறவை காய்ந்த விதை களை உண்டு, தினமும் தண்ணீருக்காக, 500 கி.மீட்டர் பறக்க வேண்டும்.தண்ணீர் தூக்கி பறவை!ஆண் கிரெஸ் பறவை குட்டையில் உட்காரும். அதன் வயிற்று சிறகுகளை தண்ணீரில் ஸ்பான்ஞை போல நனைக்கும். அது தன் கூட்டிற்கு திரும்புகையில் அதன் ஈரமான உடற்பகுதியின் மேற்பரப்பிலிருந்து குட்டிகள் நீர் அருந்தும்.உறிஞ்சும் பறவை!பெரும்பாலான பறவைகள் தங்கள் வாயால் எடுக்கும் தண்ணீரை வயிற்றுக்கு அனுப்ப தலையை அண்ணார வேண்டும். ஆனால், கிரெஸ் பறவை நம்மை போல தண்ணீரை உறிஞ்சி கொள்ளும்.மணற்கோட்டை கட்டு!இந்த மாலி (கோழி போன்ற) பறவை கூட்டை கட்டுவதில்லை. அது பெரிய மண் மேட்டை உருவாக்கும். ஒரு பள்ளத்தில் காய்ந்த இலைகளை ஏராளமாய் சேகரித்து அதனை மணலால் மூடுகிறது. காய்ந்த இலைகள் முட்டைகளுக்கு தேவையான சூட்டை தந்து அடைகாக்கும் வேலையை செய்கிறது.