ஓட்ஸ் பொங்கல்!
தேவையான பொருட்கள்:ஓட்ஸ் - 2 கப்பாசிப் பருப்பு - 1 கப்இஞ்சி - 1 துண்டு (நறுக்கியது)நெய் - 2 தேக்கரண்டிதண்ணீர் - தேவையான அளவுமிளகு - சிறிதளவுசீரகம் - சிறிதளவுபச்சை மிளகாய் - இரண்டு, நீளமாக நறுக்கியதுபெருங்காயத் துாள் - சிறிதளவுகறிவேப்பிலை - தேவையான அளவுஉப்பு - தேவையான அளவுமுந்திரி - சிறிதளவு.செய்முறை:வாணலியில், மிதமான சூட்டில், ஓட்ஸ், பாசிப் பருப்பு, இரண்டையும், தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, ஓட்ஸ், பாசிப் பருப்பு, இஞ்சி, பெருங்காயத்துாள், உப்பு, சேர்த்து, வேக வைக்கவும். ஆறியதும், பொங்கல் கலவையை மசித்து விட வேண்டும். பின், வாணலியில், நெய் ஊற்றி, சூடானதும், முந்திரி, மிளகாய், மிளகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, பொங்கலில் ஊற்றி, கிளறவும். சுவையான, சத்து மிகுந்த ஓட்ஸ் பொங்கல் தயார்!- ஜெ.ஆர்.ஜான்சி, சென்னை.