உள்ளூர் செய்திகள்

முதுமை!

இளமை பருவம் இனிமையானது. உடல் முதுமை அடைவதை மனம் ஏற்காது. ஆனாலும், இயற்கையாக அது நிகழும். அதை நல்ல உணவுகள் சாப்பிட்டு கட்டுப்படுத்தலாம்.சில உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால், விரைவில் முதுமை தோற்றம் ஏற்படும். சில முதுமை வருவதை தாமதப்படுத்தும். உணவில் உப்பு அதிகமாக சேர்த்தால் உடலில் நீரிழப்பு ஏற்படும். சிறுநீரக பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். சோர்வையும், முதிர்ந்த தோற்றத்தையும் தரும்.அதிக இனிப்பு உட்கொண்டால் உடலில் கொழுப்பு அளவு அதிகரிக்கும். உடல் எடை கூடும். தோலில் சுருக்கம் ஏற்படும். பதப்படுத்திய கொழுப்பு நிறைந்த இறைச்சி உணவு உடலுக்கு ஏற்றதல்ல. அது நோய் எதிர்ப்பு திறனை குறைக்கும். தொடர்ச்சியாக உண்டால் கடுமையான உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும். ஆரோக்கியமான உணவை அறிந்து உட்கொள்வோம்.- மு.நாவம்மா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !