வெங்காய புதினா துவையல்!
தேவையான பொருட்கள்:சின்ன வெங்காயம் - 50 கிராம்கறிவேப்பிலை - 0.5 கப்புதினா - 0.5 கப்காய்ந்த மிளகாய் - 12உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி நறுக்கிய புதினா, உரித்த வெங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு நன்கு வேக வைக்கவும். வெந்த கலவையுடன் உப்பு சேர்த்து அரைக்கவும். சத்து மிக்க, 'வெங்காய புதினா துவையல்' தயார். சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சுவை அள்ளும்.- ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.