உள்ளூர் செய்திகள்

நாட்டுப்பற்று!

தஞ்சாவூர், கல்யாணசுந்தரம் உயர்நிலைப் பள்ளியில், 1955ல், 8ம் வகுப்பில், 30 பெண்கள் படித்தோம். மாணவியரை ஆறு குழுவாக்கி, பிரிவுக்கு ஒரு பெயர் சூட்டச் சொன்னார், வகுப்பு ஆசிரியை சரோஜா. காந்திஜி, ராஜாஜி, நேருஜி, நேதாஜி, சிவாஜி என, தலைவர்கள் பெயரை எழுதி கொடுத்தேன். அவை, தேர்வு செய்யப்பட்டன. அது குறித்து விசாரித்தவரிடம், 'என் தந்தை மளிகை கடை நடத்தி வருகிறார்; கடை விளம்பரத்துக்காக, புத்தாண்டுக்கு காலண்டர் தயாரிப்பது வழக்கம். இந்த ஆண்டு இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி படம், காலண்டர் அட்டையில் அச்சிடப்பட்டுள்ளது. அதை மனதில் கொண்டுதான் தலைவர்கள் பெயரை தேர்வு செய்தேன்...' என்று கூறினேன்.மகிழ்ச்சியுடன், 'உனக்கு நாட்டுப்பற்று அதிகம்...' என பாராட்டி பெருமைப்படுத்தினார். மன நிறைவு அடைந்தேன். என் வயது, 83; அந்த ஆசிரியை பாராட்டிய நிகழ்வு, இன்றும் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. -- நா.பார்வதி, சென்னை.தொடர்புக்கு: 98946 06410


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !