உள்ளூர் செய்திகள்

புட்டிப்பால் சொத்தை!

சில குழந்தைகளுக்கு பற்களின் மேல் வரிசை, சொத்தையால் பாதிக்கப்படிருக்கும்; அவை, கருப்பாக தெரியும் அல்லது சிதைந்து இருக்கும். இது, பால் புட்டியை வாயில் வைத்து துாங்குவதால் ஏற்படுவது. பாலில் கலக்கும் சர்க்கரை, குழந்தையின் பற்களில் படிந்து, சொத்தை ஏற்படும். இதை தடுக்க, குழந்தை பால் குடித்த பின், சிறிது தண்ணீர் குடிக்க கொடுத்து, துாங்க வைக்க வேண்டும். இது, மூன்று வயதுக்குள் ஏற்படும் சொத்தை. இதை, 'புட்டிப் பால் சொத்தை' என்பர்.குட்டி பாப்ஸ், சிறியவர், இளைஞர் மற்றும் பெரியவர் என, எல்லா வயதினரும், இருவேளையும் பல் துலக்க வேண்டும்; சாப்பிட்ட பின், வாய் கொப்பளிக்க வேண்டும்; முக்கியமாக, சாக்லெட், ஐஸ்க்ரீம் சாப்பிட்ட பின், வாய் கொப்பளிப்பது, பற்களை பாதுகாக்கும்!குழந்தைப் பருவத்தில், பற்கள் விழுந்து, முளைக்கும் என்றாலும், சொத்தைக்கு சிகிச்சை பெறுவது நல்லது.வளர்ந்த பின்னும் பல் சொத்தையால் அவதிப்படுவோரும் உண்டு. இதற்கு காரணம், உணவுப் பழக்கம் தான். பலர், அளவிற்கு அதிகமாக, ஸ்வீட்ஸ், சாக்லெட், ஐஸ்கிரிம் சாப்பிடுவர். இரவில், பற்களைத் தேய்க்கும் பழக்கம், 90 சதவீதம் பேருக்கு இல்லை; இதுதான், பல் சொத்தைக்கு முக்கிய காரணம்.சர்க்கரை கலந்த பால் இரவில் குடித்து, வாய் கொப்பளிக்காமல் துாங்கினால், பற்களில் பாக்டீரியா தங்கி, சொத்தை ஏற்படுத்தி விடும். சொத்தையால் ஏற்படும் பல் ஓட்டையை உடனே அடைத்துவிட வேண்டும் அல்லது பற்களை அகற்றிவிட வேண்டும்.அகற்றிய இடத்தில் புதிய பல்லை, கட்டிக் கொள்ள வேண்டும். ஆனால், பலர், இதை செய்வதில்லை; இது மிகவும் தவறு.முன்பெல்லாம், தெற்றுப்பல், பல் இடைவெளி போன்றவற்றை சரி செய்ய முடியாது. இன்று, பல் மருத்துவ அறிவியல் வளர்ந்து விட்டது. எதையும், சரி செய்துவிடலாம். பற்களின் இடைவெளிக்குக் காரணம், பரம்பரைத் தன்மை, அளவில் பல் பெரிதாக இருப்பது போன்றவை. இதை, 'செராமிக் லேசிக்னேட்ஸ்' என்ற சிகிச்சை முறையில் சரிசெய்யலாம். 'கம்பாட் லேமினேட்ஸ்' என்ற முறையிலும், சரிசெய்யலாம். இந்த சிகிச்சை பெற்றவர்கள், கடின உணவுப்பொருட்களை கடித்து, சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும். தெத்துப்பற்களை, 'க்ளிப்' போட்டு, 'ஆர்த்தோடாண்டிக்ஸ்' முறையில், ஒன்றரை ஆண்டுகளில் சரி செய்து விடலாம்; இதற்கு வயது வரம்பு இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !