உள்ளூர் செய்திகள்

எலி வால்!

கோவை மாவட்டம், சின்னியம்பாளையம், அரசு உயர்நிலைப் பள்ளியில், 1995ல், 7ம் வகுப்பு படித்தபோது வகுப்பாசிரியராக இருந்தார் சின்னச்சாமி. அன்று வகுப்பறையில் நுழைந்தவுடன், மாணவ, மாணவியர் அலறியடித்து கொண்டிருந்ததை கண்டார்.வாசலில் மிரட்சியுடன் நின்ற என்னிடம், 'என்ன விஷயம்...' என்றார். படபடப்புடன், 'ஐயா... கோமதி பையில் எலி இருக்கு...' என்றேன். அவளை விசாரித்த போது, 'புத்தகத்தை எடுக்க பையில் கைவிட்ட போது, எலி வால் தட்டுப்பட்டது...' என்றாள். உடனே அந்த பையை வராண்டாவுக்கு எடுத்து சென்றார். பிரத்யேகமாக ஒரு இடத்தில் வைத்து குச்சியால் தட்டினார். தாவிக் குதித்து ஓட்டம் பிடித்தது எலி. அதை கண்டதும், 'வீட்டில் உணவு கொடுத்து வளர்க்கிறீர்களா...' என கேட்டு சிரித்தார்.பின், 'புத்தக பையை எப்போதும் திறந்து வைத்திருக்க கூடாது. புத்தகத்தை எடுத்தவுடன், பையை மூடி வைத்து விட வேண்டும்; வீடு, பள்ளி, மாலை நேர வகுப்பு நடக்கும் இடங்களில் எலி, பல்லி, தேள், பாம்பு போன்ற உயிரினங்கள் இருக்கும். அவை, நம் பையில் நுழைய வாய்ப்பு கொடுக்கக் கூடாது...' என்றார். அதிலிருந்து, உடைமைகளையும் பாதுகாப்பாக வைத்திருக்க கற்றேன்.தற்போது என் வயது; 42; தையல் தொழில் செய்து வருகிறேன். அன்று அந்த ஆசிரியர் எச்சரித்ததை என் குழந்தைகளிடம் கூறி, அதை பின்பற்ற வைத்துள்ளேன்.- கே.புனிதா, கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !