உள்ளூர் செய்திகள்

ரெஜினி டீச்ச்சர்!

கடந்த, 1984ல், ஏழாம் வகுப்பு படித்தேன். ஒருநாள் காலை வகுப்பில், சக மாணவன் ஒருவன், திடீரென்று மயங்கி விழுந்தான். பதறிப்போன ரெஜினி டீச்சர், முகத்தில் நீர் தெளித்து, மயக்கத்தை தெளிவித்தார். அவன் எழுந்து சொன்ன பின் தான் தெரிந்தது... பசியால் மயங்கி விழுந்த விஷயம்!அன்றிலிருந்து, அந்த ஆண்டு முழுவதும், தன் சொந்த பணத்திலிருந்து, அந்த மாணவனுக்கு காலை உணவு வாங்கி கொடுத்தார் ஆசிரியை. கையில் பணமாக கொடுத்தால், வாங்கி சாப்பிடுவானோ, மாட்டானோ என்று நினைத்து, தினமும், அவரே ஓட்டலில் வாங்கி கொடுத்தார்.அவர்களின் மனித நேயப் பண்பால், எங்கள் நண்பர் கூட்டத்தில், ரொம்ப மரியாதையாக நடத்தப்பட்டார். எங்கள் மனதிலும், மனித நேயத்தை விதைத்து, அன்னை தெரசாவாக உயர்ந்து விட்டார். இன்று ரெஜினி டீச்சர் உயிரோடு இல்லை என்றாலும், என் மனதில், அன்னை தெரசாவாகவே நீடிக்கிறார்!- எஸ்.சங்கர், திருப்பரங்குன்றம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !