சரியா? தவறா?
1. பென்சில் நடுவிலிருக்கும் கருப்பு ஊக்கு காரீயத்தால் செய்யப்படுகிறது?தவறு: பென்சிலிலுள்ள கறுப்பு ஊக்கு, பூமி யிலிருந்து கிடைக்கும் கிராபைட்டுடன் களிமண் பவுடர் சேர்த்து தயாரிக்கப் படுகிறது. இதில் காரீயம் பயன் படுத்துவது இல்லை.2. எரிமலை வெடித்து அதிலிருந்து கிளம்பும் புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.சரி: எரிமலை பிழம்பிலிருந்து சல்பர்-டை-ஆக்ஸைடு வெளியாகிறது. இதனுடன் ஆக்ஸிஜன் மற்றும் சூரிய ஒளி கலந்து ஒருவகை மேக மூட்டத்தை உருவாக்குகிறது. இதை 'வோக்' என்று அழைப்பர். இந்த 'வோக்' படலம் சுற்றுப்புறத்தில் வாழும் மக்களுக்கு இருமல், தலைவலி, ஆஸ்துமா போன்ற நோய்களை உருவாக்குகிறது.