சரியா? தவறா?
உலகில் முதல் வெப்-பேஸ்டு இலவச இ மெயில் சர்வீஸை 'ஹாட் மெயில்' தான் தொடங்கியது.சரி: இதை 1995ல் சபீர் பாட்டியா மற்றும் ஜேக்ஸ்மித் என்பவர்கள் கண்டு பிடித்தனர். ஆனால், 1996 ஜூலை 4ல் இதை அமெரிக்காவில், நடைமுறைப்படுத்தினர். இப்போதும் 'ஹாட்மெயில்' தான் மிகப்பெரிய இலவச இ-மெயில் சர்வீர் ஆகும்.மன்சூர் அலிகான் பட்டோடி என்பவர் தான் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற முதல் இந்தியர்.சரி: 1962 ல் கிரிக்கெட் விளையாட்டில் மேற்கு இந்தியர்களை எதிர்த்து விளையாடிய இந்திய அணி கேப்டன். அப்போது அவரின் வயது 21. இவர் மிகச்சிறிய வயதில் கேப்டன் பதவி பெற்றதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார்.