சரியா.... தவறா?
தென் ஆப்ரிக்காதான் உலகிலேயே பிளாட்டினம் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது?சரி:பிளாட்டினம் உற்பத்தியில் 80 சதவீதம் தென் ஆப்ரிக்காவிலிருந்து உற்பத்தியாகிறது.ரஷ்யா மற்றும் கனடாவும் பிளாட்டினம் உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கிறது. பிளாட்டினம் தங்கத்தை விட பலமடங்கு விலை அதிகம்.பொதுவாக பூமியில் உள்ள மலைகள் எல்லாம் கிரானைட் கற்கள் ஆகும்!தவறு: பெரும்பகுதி மலைகள் எரிமலைக் குழம்புகளில் உருவானவை. இந்த கடினமான கறுப்பு குழம்புகளில் குறைந்த அளவே சிலிக்கா உள்ளது. பெரும்பாலான கடலின் தரைப்பகுதி எரிமலை பிளம்புகளால் உருவானவை. இந்தியாவில் தக்காண பீடபூமியும் எரிமலை பிளம்புகளால் உருவானவையே!