ருஷ்மோர் தேசிய நினைவகம்!
அமெரிக்காவிலுள்ள 'தென்டகோடா' என்ற இடத்தில் அமைந்திருக்கிறது ருஷ்மோர் தேசிய நினைவகம்.இந்த கிரானைட் மலையில் தான் 150 ஆண்டு கால அமெரிக்க வரலாற்றைக் குறிக்கும் வகையில் நினைவகம் அமைக்கப்பட்டிருக்கிறது.அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெபர்சன், தியோடர் ரூஸ்வெல்ட் மற்றும் ஆப்ரஹாம் லிங்கனின் சிலைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன.ருஷ்மோர் மலை கிரானைட் கற்களால் ஆனது. இங்கு முழுச் சிலைகள் வடிவமைக்கப்பட்டிருக்கவில்லை. அதிபர்களின் தலை மட்டுமே செதுக்கப்பட்டிருக்கின்றன. சிலைகள் என்றால் சாதாராண சிலைகள் அல்ல. ஒவ்வொன்றும் ராட்சத வடிவம் கொண்டது. சிலைகளின் உயரம் 60 அடி. சிலைகளின் மூக்கின் நீளம் 20 அடி. வாயின் அகலம் 18 அடி. காது 11 அடி நீளம் கொண்டது. 1,278 ஏக்கர் பரப்பளவில், இந்த ருஷ்மோர் தேசிய நினைவகம் அமைக்கப்பட்டிருக்கிறது.சார்லஸ் இ.ருஷ்மோர் என்பவர் தேசிய நினைவகம் அமைக்க உதவினார். எனவே, அவரது பெயராலேயே, 'ருஷ்மோர் மலை' என்று அழைக்கப்படுகிறது. 1927-ம் ஆண்டு சிலை வடிக்கும் வேலை தொடங்கப்பட்டது. 1941-ம் ஆண்டுதான் முழுமை அடைந்தது. பதினான்கு ஆண்டு காலம் குட்ஸன் போர்க் கலம் தலைமையில், 400 தொழிலாளர்களின் உழைப்பில், 'ருஷ்மோர் நினைவகம்' உருவாக்கப்பட்டிருக்கிறது.