உள்ளூர் செய்திகள்

கம்பு சூப்!

தேவையான பொருட்கள்:கம்பு மாவு - 1 கப்புளித்த மோர் - 1 கப்இஞ்சி, பச்சை மிளகாய் - சிறிதளவுகறிவேப்பிலை, உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:கம்பு மாவை, முதல் நாள் இரவே தண்ணீரில் கரைத்து வைக்கவும். காலையில் அந்த கரைசலை கொதிக்க வைத்து அடிபிடிக்காமல் கிளறவும். மாவு நன்கு வெந்ததும், அரைத்த இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு கலந்து இறக்கவும்.இந்த கலவை ஆறியதும், நீர்த்த மோர், கறிவேப்பிலை சேர்க்கவும். சுவைமிக்க, 'கம்புசூப்' தயார். மண் குவளையில் பருகினால் அமிர்தமாக இருக்கும். அனைத்து வயதினருக்கும் ஏற்றது. - அனுராதா மணிவண்ணன், கோவை.தொடர்புக்கு: 0422 - 2214198.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !