சிம்பிள் சயின்ஸ்!
ஒரே அளவுள்ள இரண்டு துண்டு ஐஸ் கட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு ஐஸ் கட்டிக்கும் நடுவில் ஒரு துண்டு நூலை வைக்கவும். சிறிது நேரத்தித்திற்கு பிறகு நூலை எடுத்தால் அது வராது. இரண்டு ஐஸ் கட்டிகளிலும் ஒட்டியிருக்கும். நடுவில் நூல் மாட்டி இருக்கும். இப்போது நூலினால் ஐஸ் கட்டியை தூக்கி விடலாம். இதற்கு காரணம் என்ன?ஐஸ் கட்டிகள் குறைந்த காற்றழுத்ததில் உருகும் போது, இரண்டு துண்டிற்கும் இடையேயுள்ள அழுத்தம் வெளியேறுகிறது. அழுத்தம் வெளியேறியதால் இரண்டு ஐஸ் கட்டிகளுக்கும் இடையே ஐஸ் மீண்டும் உறைகிறது. எனவே, இரண்டு ஐஸ் கட்டிகளும் ஓட்டிக் கொள்கிறது. இடையே இருக்கும் நூலும் ஒட்டிக் கொள்கிறது.