உள்ளூர் செய்திகள்

குதிரை வாலி பிடி கொழுக்கட்டை!

தேவையான பொருட்கள்: குதிரைவாலி அரிசி - 1 கப் கேரட் துருவல் - 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 எண்ணெய், கடுகு, பெருங்காயம் - சிறிதளவு தண்ணீர், உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு. செய்முறை: வா ணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், கேரட் துருவல் சேர்த்து வதக்கவும். பின் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அதில் குதிரைவாலி அரிசி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். வெந்தபின் ஆறவிட்டு சிறு உருண்டைகளாக பிடித்து, ஆவியில் வேக வைக்கவும். சத்துள்ள, 'குதிரை வாலி பிடி கொழுக்கட்டை!' தயார். புதினா சட்னி, சாம்பாருடன் தொட்டு சாப்பிடலாம். அனைத்து வயதினரும் விரும்புவர். - எஸ்.ஸ்ரீலதா, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !