சுட்டீஸின் முத்து கையெழுத்து!
பொறுப்பாசிரியர் அவர்களுக்குவணக்கம். சிறவர் மலர் இதழில் வெளிவரும் படக்கதை பகுதியை விரும்பிப் படிப்பேன். பொது அறிவு பகுதி மூலம் நிறைய கற்றுள்ளேன். ‛மொக்க ஜோக்ஸ்' பகுதியில் வரும் ஜோக்ஸ் அனைத்தும் புதுமையாக உள்ளது. குழந்தைகளின் புகைப்படங்களை ஆர்வமுடன் பார்ப்பேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் படிக்கும் விதமாக இம்மலர் வெளிவருகிறது. எங்கள் பள்ளி மாணவனின் ஓவியம் சிறுவர்மலர் இதழில் வெளிவந்தது எங்களுக்கும் எமது பள்ளிக்கும் பெருமையாக இருந்தது.நன்றி..இப்படிக்கு ர.சவுபிகா ஸ்ரீ 8ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திருப்பூர்.