கவுனி அரிசி அல்வா!
தேவையான பொருட்கள்:கருப்பு கவுனி அரிசி - 1 கப்தேங்காய் பால் - அரை கப்சர்க்கரை - 4 தேக்கரண்டிஏலக்காய் துாள், தேங்காய் துருவல், தண்ணீர், நெய் - தேவையான அளவு.செய்முறை: கறுப்பு கவுனி அரிசியை, 10 மணி நேரம் ஊற விடவும். பின் நன்கு வேக வைத்து மசிக்கவும். வாணலியில் நெய்யை சூடாக்கி மசித்த அரிசியை போட்டு வதக்கி, சர்க்கரை, தேங்காய்பால், ஏலக்காய் துாள், நெய் சேர்த்து கிளறவும். பின், தேங்காய் துருவல் கலந்து இறக்கவும். சத்துகள் நிறைந்த, 'கவுனி அரிசி அல்வா' தயார். அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர். - உமா மகேஸ்வரி, காரைக்குடி.