உள்ளூர் செய்திகள்

இஞ்சி, கறிவேப்பிலை தொக்கு!

தேவையான பொருட்கள்:இஞ்சி - 100 கிராம்கறிவேப்பிலை - 50 கிராம்புளி, உப்பு, மிளகாய் வற்றல், நல்லெண்ணெய் - தேவையான அளவுஉளுந்தம் பருப்பு, கடுகு, பெருங்காயம் - சிறிதளவு.செய்முறை:நல்லெண்ணெய் சூடானதும், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, புளி, உப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து, ஆறியதும் அரைக்கவும். பின், கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து, அரைத்த கலவையைக் கொட்டி தொக்கு பதத்திற்கு கிளறவும். சுவைமிக்க, 'இஞ்சி, கறிவேப்பிலை தொக்கு!' தயார். சத்துக்கள் நிறைந்தது. உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்.- ப்ரீதா ரெங்கசாமி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !