உள்ளூர் செய்திகள்

கண்டங்கத்தரி தோசை!

தேவையான பொருட்கள்: கண்டங்கத்தரி இலை - 15 கேழ்வரகு மாவு - 1 கப் கருப்பட்டி - 500 கிராம் மிளகு - 10 வெள்ளை எள் - 3 தேக்கரண்டி உப்பு, தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: கேழ்வரகு மாவு, பொடித்த கருப்பட்டியுடன் தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதமாக்கி, உப்பு, வெள்ளை எள் சேர்க்கவும். முட்களை நீக்கி சுத்தம் செய்த, கண்டங்கத்தரி இலை, மிளகை நன்றாக அரைத்து மாவுடன் கலக்கவும். தோசைக் கல் சூடானதும் எண்ணெய் தடவி, தோசையாக சுட்டு எடுக்கவும். ஆரோக்கியம் தரும், 'கண்டங்கத்தரி தோசை!' தயார். சட்னி தொட்டு சாப்பிடலாம். நெஞ்சு சளி, இருமல், சுவாச கோளாறை நீக்கி நலம் தரும். - ஆர்.ஜமுனா ராணி, விருதுநகர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !