உள்ளூர் செய்திகள்

மெழுகு சிலைகள்!

மெழுகு சிலைகளுக்கு புகழ் பெற்றது, ஐரோப்பிய நாடான இங்கிலாந்து லண்டனில் உள்ள மேடம் டூசாட்ஸ் மியூசியம். உலகில் பிரபல அரசியல் தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. மெழுகு உருவச் சிலைகளை தத்ரூபமாக வடித்தவர் மேடம் டூசாட்ஸ். தன் தொழிற்கூடத்தில் செய்தார். அதை பார்த்து, ரசித்த சிறுமி டூசாட்ஸ் மெழுகு சிலைகள் செய்ய கற்றார். அதன் தொடர்ச்சியாக அருங்காட்சியகம் உருவானது. கவிஞர் வால்டேர் உருவச்சிலை தான், முதன்முதலாக வைக்கப்பட்டது. பின், விஞ்ஞானி பெஞ்சமின் பிராங்கிள் சிலை வைக்கப்பட்டது. இங்கிலாந்து ராணி எலிசபெத் உருவம் அதிக பட்சமாக, 23 முறைகளுக்கு மேலும், மெழுகு சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. இந்த மியூசியத்தில் முதலில் இடம் பிடித்த இந்தியர் காந்திஜி. அவரது சிலை, 1960ல் இடம் பெற்றது. அடுத்து, இந்திரா காந்தி, விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் இடம் பிடித்தார். இந்த மியூசியத்தின் முதல் கிளை, 1970ல் ஐரோப்பிய நாடான நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் துவங்கப்பட்டது. தற்போது, 25க்கும் மேற்பட்ட கிளைகள் உலகெங்கும் உள்ளன. நம் நாட்டின் தலைநகர் டில்லியிலும் ஒன்று உள்ளது. -- கோவீ.ராஜேந்திரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !