ஒரு பதக்கத்துக்கு, 10 விளையாட்டு!
தடகளப் போட்டிகளில் பங்கேற்கும் போது மூச்சு வாங்கும். மனம் உற்சாகம் பெற்றிருந்தாலும், உடல் ஓய்வுக்கு ஏங்கும். இதுபோல் திறன் செலுத்தும், 10 விளையாட்டுக்களை ஒரே மூச்சில் தொடர்ந்தால் எப்படி இருக்கும். அந்த அனுபவத்தை தருவது, 'டெக்காதலான்' என்ற அசுர விளையாட்டு. அதிக சக்தியும், கடும் பயிற்சியும், திறனும் உள்ளோரே இதில் பங்கேற்க இயலும்.ஒலிம்பிக்கில், ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் உள்ளது. இதில் வெல்பவரே, உலகின் மிகச்சிறந்த தடகள வீரராக மதிக்கப்படுவார். பெண்கள், ஏழு விளையாட்டு தொகுதிகளை உடைய, 'ெஹப்டாதலான்' என்பதில் தான் போட்டியிட முடியும்.ஒலிம்பிக் விளையாட்டில், இந்த போட்டி, 1912ல் அறிமுகமானது. முதன்முறை பதக்கம் வென்றவர், ஜிம் தோர்ப். அமெரிக்காவை சேர்ந்தவர். அப்போது, மூன்று நாள் நிகழ்வாக நடந்தது; இப்போது, இரண்டு நாட்களாக நடக்கிறது.முதல் நாள் முதலில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடக்கும். தொடர்ந்து, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல்... அடுத்து, 400 மீட்டர் ஓட்டப்பந்தயம்.இரண்டாம் நாள் முதலில், 110 மீட்டர் தடையோட்டம். தொடர்ந்து, வட்டெறிதல், ஹாமர் எறிதல், ஈட்டி எறிதல், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், மாரத்தான் என, ஓய்வின்றி வரிசையாக திறனைக் காட்ட வேண்டும்.டெக்காதலான் விளையாட்டு பிரிவில் சிறப்பு பெற்றவர் டாலி தாம்சன். ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்தவர். அடுத்து இந்த பெருமையை அடைந்திருப்பவர் கெவின் மேயர். ஐரோப்பிய நாடான பிரான்சை சேர்ந்த இவர், 2018 ஒலிம்பிக் போட்டியில், 9,126 புள்ளிகள் எடுத்தார். தற்போது, 2024 ஒலிம்பிக்கில் ஐரோப்பிய நாடான நார்வேயை சேர்ந்த மார்கஸ் ரூத் தங்க பதக்கம் பெற்றுள்ளார்.