சாதனை ஆர்வம்!
சி வகங்கை மாவட்டம், காரைக்குடி, கேந்திரிய வித்யாலயா பள்ளியில், 2008ல், 6ம் வகுப்பு படித்த போது, விளையாட்டில் கவனம் செலுத்தினேன். அதிகாலையே மைதானத்துக்கு சென்றுவிடுவேன். என் ஆர்வம் கண்டு உடற்பயிற்சி ஆசிரியர் மணி அழகன் பயிற்சி தந்தார். போட்டிகளில் பங்கேற்க துாண்டினார்.ஒருமுறை காயம் பட்டதால் துவண்டு போனேன். பயிற்சிக்கு செல்வதை தவிர்த்து வந்தேன். என் வீடு தேடி வந்து, நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசி உற்சாகம் தந்து அழைத்தார் உடற்பயிற்சி ஆசிரியர். தொடர்ந்து முயன்று தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றேன். உத்தரபிரசேத மாநிலம், லக்னோவில், 2012ல் நடந்த போட்டியில் தனிநபருக்கான 200, 100 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் முறையே முதல், இரண்டாம் இடங்களை பெற்றேன். தொடர் ஓட்ட போட்டியில் சென்னை மண்டல அளவில் முதல் பரிசு கிடைத்தது. இந்த சாதனைகளை பாராட்டி இறைவணக்க கூட்டத்தில் கவுரப்படுத்தனார், பள்ளி முதல்வர் ராஜகோபால். என் வயது, 27; சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். தனிப்பட்ட முறையில் ஆர்வமுள்ள சிறுவர்களுக்கு ஓட்டப்பயிற்சியும் அளித்து வருகிறேன். குறும்படம் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளேன். என் ஆர்வத்தை சாதனையாக்கிய உடற்பயிற்சி ஆசிரியர் மணி அழகனை போற்றி வாழ்கிறேன்.- பி.ஹரிகிருஷ்ணன், சென்னை. தொடர்புக்கு: 94872 77173