உள்ளூர் செய்திகள்

ஸ்கூல் கேம்பஸ்!

@quote@

திருந்த செய்!ம யிலாடுதுறை, ரோட்டரி கிளப் மேல்நிலை பள்ளியில், 2011ல், 11ம் வகுப்பு படித்தேன். வேதியியல் ஆசிரியராக இருந்த எம்.மோகன்ராஜ் மிகவும் கண்டிப்பானவர். தெளிவாக பாடங்களை கற்பித்து மனதில் பதிய வைப்பார்.அன்றைய வகுப்பில், 'ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் அறிந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அ றைகுறையாக படிக்கக் கூடாது. இரண்டு பாடங்கள் என்றாலும், அவற்றில் உள்ள கேள்விகளுக்கு முழுமையான மதிப்பெண் பெறும் வகையில் ஆழ்ந்து படியுங்கள்...' என, அறிவுரைத்தார்.இது, வாழ்வுக்கு பயன்படும் பாடமாக இருக்கும் என்ற எண்ணம் அப்போது ஏற்படவில்லை. பணியில் சேர்ந்த பின், பெரிதும் உதவி வருகிறது.எனக்கு, இப்போது 31 வயதாகிறது. பன்னாட்டு நிறுவனத்தில் குழு தலைவராக பணியாற்றுகிறேன். ஒரு நாளில் பல வேலைகள் இருந்தாலும், அவற்றை அறைகுறையாக செய்வதை தவிர்த்து, ஒன்றிரண்டை குறையின்றி, முழுமையாக முடிப்பதை பின்பற்றுகிறேன். என் குழுவினருக்கும் அதையே எடுத்துக் கூறுகிறேன்.பள்ளியில் வேதியியல் ஆசிரியர் எம்.மோகன்ராஜிடம் பல ஆண்டுகளுக்கு முன் பெற்ற அறிவுரை, இன்று பலரையும் சென்றடைவது மகிழ்ச்சி தருகிறது.- ரா.சோமசுந்தரம், சென்னை.தொடர்புக்கு: 86087 14913@@quote@@ @quote@

பொய் பேசாதே!வி ழுப்புரம் மாவட்டம், கிளியனுார் அரசு ஆரம்ப பள்ளியில், 1990ல், 5ம் வகுப்பு படித்தேன். வகுப்பாசிரியராக இருந்த நடராஜன் கண்டிப்பு நிறைந்தவர். பாடம் நடத்துவதில் முன்னோடியாக திகழ்ந்தார். ஒழுக்கத்தை பின்பற்ற கற்றுத் தந்து, பாசம் காட்டுவார். குறும்பு செய்வோரை வார்த்தையாலே வசியப்படுத்தி விடுவார்.அன்று வகுப்பறையில் நண்பனின் புத்தகத்தை கிழித்து விட்டேன். அது பற்றி விசாரித்த வகுப்பாசிரியரிடம், 'அந்தப் புத்தகத்தை தொடவே இல்லை...' எனக் கூறினேன்.கண்களை கூர்ந்து நோக்கி, 'தவறு செய் வது இயல்பு. அதை ஒப்புக் கொண்டு, மன்னிப்பு கேட்க வேண்டும். பொய் சொல்லக் கூடாது. பொய் சொன்னால் கடவுள், நாக்கில் சூடு போட்டு விடுவார்...' என்றார் ஆசிரியர்.மறுநாள், வீட்டில் டீ குடித்தபோது வந்த என் தங்கை, கவன பிசகால் தட்டி விட்டாள். சூடான டீ வாயில் கொட்டி, நாக்கு வெந்தது. வாயையே திறக்க முடியாமல் தவித்தபோது, 'இனி எப்போதும் பொய் பேசக் கூடாது. தவறை ஒப்புக் கொண்டு, இரண்டு அடிகள் கூட வாங்கிக் கொள்ளலாம்' என, முடிவு செய்தேன்.எனக்கு 42 வயதாகிறது. சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறேன். பொய் பேசுவதை தவிர்த்து என் பிள்ளைகளையும் அதுபோலவே வளர்த்து வருகிறேன்.இதற்கு துாண்டுதலாக இருந்த, வகுப்பாசிரியர் நடராஜனை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்.- கே.ஷேக் அப்துல்லா,- விழுப்புரம்.தொடர்புக்கு: 93842 34019@@quote@@ @quote@

பொக்கிஷ தருணம்!செ ன்னை, புரசைவாக்கம், சி.எஸ்.ஐ., நடுநிலைப் பள்ளியில், 2007ல், 8-ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...அன்று பள்ளியில் மாணவ - மாணவியர் திறன் குறித்த ஆய்வு நடந்தது. என் பங்களிப்பாக, 'குழந்தைத் தொழிலாளர்' என்ற கருப்பொருளில், பாவாடை, சட்டை அணிந்த சிறுமி, தலையில் செங்கற்கள் நிரம்பிய கூடையை சுமப்பது போல படம் வரைந்து காட்சிப்படுத்தி இருந்தேன்.குழந்தை தொழிலாளர் இழப்பனவற்றை கல்வி, சமுதாயம், குடும்பச் சுமை, குழந்தைப் பருவம் என, ஒவ்வொரு செங்கலிலும் எழுதி இருந்தேன்.படைப்புகளை ஆய்வு செய்த கல்வி அதிகாரி, என் படத்தை பார்த்ததும், 'யார் வரைந்தது...' என கேட்டார். பயம் கலந்து நின்றிருந்த என்னை நோக்கி சைகை செய்தார் வகுப்பாசிரியை ரஜினி. பதற்றத்துடன் அதிகாரி அருகில் சென்றேன்.என் படத்தையும், ரெட்டை ஜடையில் சீருடையுடன் நின்றிருந்த என்னையும் மாறி மாறி பார்த்தபடி, 'ரொம்ப அழகா வரைஞ்சிருக்கீங்க... இன்னும் நிறைய வரையணும்...' என்றார் அதிகாரி. பெருமிதம் தந்த அந்த பாராட்டு, வரைவதிலும், சிந்தனையை அழகாக படைப்பதிலும் தீவிர ஆர்வத்தை ஏற்படுத்தியது. கல்லுாரியில் படித்த போது கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பரிசுகள் வெல்ல துாண்டியது.என் வயது 29; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். பள்ளியில் பயத்தின் நடுவே ஆய்வு அதிகாரியிடம் பெற்ற பாராட்டு, எனக்குள் மிகப்பெரிய தன்னம்பிக்கையை விதைத்தது. வாழ்நாளில் மறக்க முடியாத, பொக்கிஷ தருணமாக அதை கருதுகிறேன்.- கா.பானுபிரியா, சென்னை.@@quote@@


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !