உள்ளூர் செய்திகள்

யார் புத்திசாலி!

கதைகளில், காக்கையும், நரியும் முட்டாள், ஏமாளி போன்று சித்தரிக்கப்படுகிறது. உண்மையில், அவை புத்திசாலி உயிரினங்களா என்பது பற்றி அறிவியல் பூர்வமாக ஆய்வுகள் நடந்தன. அதில் அவற்றின் உண்மை குணம் மற்றும் செயல்பாடுகள் தெரிய வந்துள்ளது.குயில், முட்டையை காக்கை கூட்டில் இடும். காக்கை அவற்றை அடைகாத்து பொரித்து, பெரிதாக வளரும் வரை பாதுகாக்கும். இந்த செயலால், காக்கை முட்டாள், ஏமாளி போல் தோன்றும். இதன் பின்னணியில் வியப்பான உண்மை இருப்பதை ஆய்வாளர் டானிலா விளக்கியுள்ளார். அவரது கண்டுபிடிப்புபடி, காக்கை குஞ்சு, குயில் குஞ்சுடன் வளரும் போது, ஆரோக்கியமாக இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, காக்கை குஞ்சுகளுக்கு, குயில் குஞ்சுகள் ஒருவகையில் பாதுகாப்பு தருகின்றன. குயில் குஞ்சு உடலில் பசை போன்ற துர்நாற்றம் உடைய திரவம் வெளி வருவதை கண்டறிந்துள்ளனர். இது, குயில் மற்றும் காக்கை குஞ்சுகளுக்கு பாதுகாப்பு தருவதாக கண்டறியப்பட்டுள்ளது. -- சு.பால்ராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !