தக்காளி ஜாம்!
தேவையான பொருட்கள்: தக்காளி - அரை கிலோ சர்க்கரை - 350 கிராம் எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி பட்டை, கிராம்பு - சிறிதளவுசெய்முறை: கொதிக்கும் வெந்நீரில், தக்காளியை கீறி போட்டு, மூடி வைக்கவும். ஆறியதும், தோல் உரித்து, விதையை நீக்கி, சதைப்பகுதியை மட்டும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, இந்த கலவையை போட்டு, நீர் சுண்டும் வரை கிளறவும். பின், சர்க்கரையை சேர்க்கவும். கலவை கொதித்து கெட்டியானதும், எலுமிச்சை சாறு சேர்க்கவும். பட்டை மற்றும் கிராம்பை பொடி செய்து போட்டு, கிளறி இறக்கவும். சுவையான தக்காளி ஜாம் தயார். இட்லி, தோசை, ரொட்டியில் தடவி கொடுத்தால், குழந்தைகள் விரும்பி உண்பர். கண்ணாடி பாட்டில்களில் வைத்து பயன்படுத்தலாம். - மு.ஜெயந்தி, கோவை.