உள்ளூர் செய்திகள்

வாய்ப்பு வரும்!

கோவை மாவட்டம், சமத்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1974ல், எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்றேன். ஆசிரியராகும் கனவுடன் இருந்த எனக்கு, பயிற்சி பள்ளியில் சேர, குடும்ப வறுமை இடம் தரவில்லை.பொள்ளாச்சி, ஏ.நாகூர் மத்திய உயர்நிலைப் பள்ளியில், 1979ல், எழுத்தர் பணி கிடைத்தது. அங்கு தலைமையாசிரியராக இருந்த ஆர்.கே.ராமசாமி, ஒழுக்கமும், கண்டிப்பும் மிக்கவர். அவரிடம் என் கனவை கூறினேன். உடனே, 'இப்போதும் ஒன்றும் குறைந்து விட வில்லை. அஞ்சல் வழியில் உயர்க் கல்வி பயின்று முயற்சி செய். ஆசிரியர் கனவு நிச்சயம் நிறைவேறும்...' என, உற்சாகமூட்டினார். அந்த அறிவுரைப்படி, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் அஞ்சல்வழியில் சேர்ந்து படித்து, பி.எட்., மற்றும் எம்.ஏ., பட்டங்கள் பெற்றேன். பணியாற்றிய பள்ளியிலே, 2007ல், பட்டதாரி ஆசிரியரானேன். என் லட்சியம் நிறைவேறியது. எனக்கு, 58 வயதாகிறது. பள்ளியில் எழுத்தராக இருந்த எனக்கு உற்சாகம் ஊட்டி, 'நிச்சயம் வாய்ப்பு வரும்' என, மேற்படிப்புக்கு அறிவுறுத்தி, நீண்ட நாள் கனவு நிறைவேற உறுதுணையாக இருந்த, தலைமையாசிரியர் ஆர்.கே.ராமசாமியை, ஒவ்வொரு நாள் இரவும் படுக்கைக்கு செல்லும் முன், நெஞ்சில் எண்ணி, வணங்கி நெகிழ்கிறேன். - சீ.ராஜேந்திரன், கோவை. தொடர்புக்கு: 97504 39980


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

raman
அக் 02, 2026 16:05

இவர் பள்ளி இறுதி படித்த வருடத்தை பார்க்கும்போது , இவருக்கு வயது 67 .ஆனால் வயது 58 என்று தவறாக குறிப்பிட்டிருக்கிறார்