வெந்தய துவையல்!
தேவையான பொருட்கள்: வெந்தயம், உளுந்தம் பருப்பு - தலா 4 தேக்கரண்டி கடுகு, நல்லெண்ணெய், புளி, வெல்லம் - சிறிதளவு பெருங்காயத் துாள், காய்ந்த மிளகாய், தண்ணீர், உப்பு - தேவையான அளவு.செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய் சூடானதும், கடுகு, வெந்தயம், உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும். ஆறிய பின், பெருங்காயத்துாள், உப்பு, வெல்லம், புளியுடன், தண்ணீர் சேர்த்து துவையலாக அரைக்கவும். சுவை மிக்க, 'வெந்தய துவையல்!' தயார். சாதத்துடன் பிசைந்து சாப்பிட ருசி அமோகமாக இருக்கும். உடலுக்கும் குளிர்ச்சி தரும். - ஆர்.பத்மப்ரியா, திருச்சி.