உள்ளூர் செய்திகள்

வெற்றியும் பெருமையும்!

சென்னை, மந்தைவெளி, பிரிமியர் அகாடமியில், 2017ல், 59ம் வயதில் பட்டயக் கணக்கர் இறுதித் தேர்வுக்கான பயிற்சியில் சேர்ந்தேன். அதற்கு முன், ஐ.எஸ்.சி.ஏ., என்ற தேர்வில் தொடர்ந்து ஒன்பது முறை தேர்ச்சியை தவறியிருந்தேன். மன உறுதியிழந்திருந்திருந்த நிலையில் துரித பயிற்சி வகுப்பை, 15 நாட்கள் நடத்தினர் பயிற்றுனர் பரத்குமார். முதல் நாள் வகுப்பிலே, 'தேர்வில் வென்றால் மகிழ்ச்சி, பெருமை, பதவி உயர்வு, வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்லுதல் போன்ற மேன்மைகள் அடுத்தடுத்து ஏற்படும். இதை மனதில் வாங்கி படிக்க துவங்குங்கள். இது போன்ற காட்சியுடன் வகுப்பை கவனிப்பது, நேர்மறை சிந்தனையை தரும். அதுவே, வெற்றிக்கு உந்து சக்தியாக இருக்கும்...' என அறிவுரை கூறினார். அந்த குறுகிய கால பயிற்சிக்கு பின், குறிப்பிட்ட பாடத்தில் தேர்ச்சி பெற்றேன்; பட்டய கணக்கர் தகுதியை பெற்றேன். பட்டமளிப்பு விழாவில் எடுத்த புகைப்படம் நான் படித்த அகாடமி வெளியிடும் மாத இதழ் அட்டையில் பிரசுரமானது. அது எனக்கும், என் குடும்பத்தாருக்கும் பெருமை சேர்த்தது. எனக்கு, 67 வயதாகிறது. தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். பின், பட்டய கணக்கராக சேவையாற்றி வருகிறேன். இந்த நிலைக்கு உயர வழிகாட்டியாக இருந்த பயிற்றுனர் பரத்குமாரை போற்றுகிறேன். வாழ்வில் பெற்றுள்ள வெற்றி, பெருமையை அவர் பாதங்களில் சமர்ப்பித்து மகிழ்கிறேன். - என்.சரோஜா, பழனி.தொடர்புக்கு: 98944 66054


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !