உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 81; அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். பல ஆண்டுகாலமாக சிறுவர்மலர் இதழ் வாசகன். இதில், ஸ்கூல் கேம்பஸ் படிக்கும் ஒவ்வொருவரையும், பள்ளி நாட்களை நினைக்க வைத்து, உற்சாக மூட்டும். வயது முதிர்ந்த காலத்தில், டானிக் போல் செயல்படுகிறது. அதிமேதாவி அங்குராசு தரும் செய்திகள், வியப்பூட்டுகின்றன.புதிர் பகுதியில் புள்ளிகளை இணைத்து, வண்ணம் தீட்டுவதே தனி சுகம் தருகிறது. உங்கள் பக்கம் பகுதியில் வரும் சிறுவர், சிறுமியர் கை வண்ணத்தை காட்டி, பேத்தி, பேரன்களை வரைய துாண்டி வருகிறேன். இளஸ்... மனஸ்... பகுதி குழந்தைகளுக்கு சிறந்த வழிகாட்டியாக உள்ளது. சிறுகதை, மொக்க ஜோக்ஸ், மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன் என்று, உடலையும், மனதையும் உற்சாகம் ஊட்டும் சிறுவர்மலர் என்றும் மணம் பரப்ப வாழ்த்துகிறேன்.- க.ஆறுமுகம், கோவை.தொடர்புக்கு: 99420 89902


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !