வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 73; இல்லத்தரசியாக இருக்கிறேன். நீண்ட காலமாக சிறுவர்மலர் இதழை வாசித்து வருகிறேன். சனிக்கிழமை இதழை கையில் பெற்றவுடன், சிறுமியாக உணர்கிறேன். நினைவுகளை அள்ளித்தரும், 'ஸ்கூல் கேம்பஸ்' கட்டுரைகளை படிக்கும் போது, பள்ளி பருவத்திற்கே அழைத்து செல்கிறது. வகுப்பறையில் இருக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. என் பேரப்பிள்ளைகள் தொடர்கதையை, ஆர்வமுடன் படிக்கின்றனர். சிறுகதைகள் சிறார்களை நல்வழிப்படுத்துகின்றன. சிறுவர், சிறுமியர் கைவண்ணத்தில், 'உங்கள் பக்கம்' பகுதி ஓவியங்கள் அபார திறமைகளை காட்டி வியப்பில் ஆழ்த்துகிறது. உள்ளம் கவரும், 'மொக்க ஜோக்ஸ்' தமாசுகள் வயிறை பதம் பார்க்கின்றன. புள்ளிகளை இணைத்து படமாக்கி வண்ணம் தீட்டுவது மகிழ்ச்சியை பன்மடங்காக்குகிறது. 'மம்மீஸ் ெஹல்த்தி கிச்சன்' உணவை சமைத்து ருசித்து மகிழ்கிறோம்.குட்டி குட்டி மலர்களின் புகைப்படங்கள் மனதை கவர்கின்றன. அனைவரும் விரும்பும் சிறுவர்மலர் இதழ், என்றும் வாசம் வீசி அறிவை அள்ளித்தர வாழ்த்தி மகிழ்கிறேன்.- ப.பொம்மி, சென்னை.தொடர்புக்கு: 79040 50917