கரப்பான்!
வீட்டில் குப்பை சேர்ந்தால் கரப்பான் பெருக வாய்ப்பு உள்ளது. சாக்கடை, குப்பைக் கூடை, குழாய் ஓட்டைகளில் வசிக்கும். இது, வீட்டுக்குள் வராமல் தடுக்கும் வழி முறைகள் பற்றி பார்ப்போம்...கரப்பான் பூச்சி நடமாடும் இடத்தில், கிராம்பை வைக்கலாம். கிராம்பு எண்ணெயை சிறிது தண்ணீரில் கலந்து, 'ஸ்பிரே' செய்யலாம். இந்த வாசனைக்கு, கரப்பான் பூச்சி அண்டாது. அவ்வப்போது, புது கிராம்பு வைக்க வேண்டும்.சர்க்கரையில், பேக்கிங் சோடாவை சம அளவு கலந்து, கரப்பான் பூச்சி நடமாடும் இடத்தில் துாவ வேண்டும். அதை சாப்பிட்டால் இறந்து விடும். பிரியாணி இலையை பொடி செய்து, கரப்பான் பூச்சி உலாவும் இடத்தில் துாவலாம். அந்த வாசனைக்கும் வராது.கோதுமை மாவில், போரிக் ஆசிட் சேர்த்து பிசையவும். இந்த கலவையை சிறு உருண்டைகளாக்கி, கரப்பான் பூச்சி உலாவும் இடங்களில் வைக்கவும். அதை கரப்பான் சாப்பிட்டால் இறந்து விடும்.- மு.சம்சுதீன் புஹாரி