மரத்தக்காளி!
தென் அமெரிக்க நாடான பெருவை தாயகமாக கொண்டது மரத்தக்காளி. இதை, 'குறுந்தக்காளி' என்றும் அழைப்பர். ஆங்கிலேயர்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மரம், 3 மீட்டர் உயரம் வரை வளரும்.பழம் முட்டை வடிவத்தில், இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். விதை மற்றும் தண்டு போத்து முறையில் இனப்பெருக்கம் நடக்கிறது. மரத்தக்காளி பழத்தில் சுவை மிக்க ஜாம் தயாரிக்கலாம். மரத்தில் இருந்து, 10 ஆண்டுகள் வரை பழங்களை அறுவடை செய்யலாம். ஆண்டு முழுதும் பலன் தரும். ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் அதிகமாக காய்க்கும். ஒரு ஆண்டில், ஒரு மரத்தில், 10 கிலோ பழங்கள் வரை கிடைக்கும்.இதன் பருப்பிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது, செம்மஞ்சள் நிறத்திலிருக்கும். வயிற்றில் நாக்குப் பூச்சிகளை போக்கும். கண்களை பளிச்சிட வைக்கும். தமிழகத்தில், நீலகிரி மாவட்ட மலைப்பகுதியில் விளைகிறது.