வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 46; இல்லத்தரசியாக இருக்கிறேன். சிறுவர்மலர் இதழை, 15 வருட காலமாக ஆர்வமுடன் படிக்கிறேன். சனிக்கிழமைகளில் மனதில், சந்தோஷம் பெருகும். முதலில், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியில் கடிதங்களை படிப்பேன். என் அறிவுக் கண்களை திறந்த ஆசிரியர்களை நினைவுப்படுத்தும் வாய்ப்பாக அது அமையும்.சிறுவர், சிறுமியர் வரையும் ஓவியங்கள், 'உங்கள் பக்கம்!' பகுதியை அலங்கரித்து ஆச்சரியக்கடலில் மூழ்க செய்கிறது. வழி காட்ட, 'இளஸ்... மனஸ்...' தரும் ஆலோசனைகள், அறிவூட்ட, 'அதிமேதாவி அங்குராசு!' தரும் பயன்மிகு தகவல்கள் சிறப்பு சேர்க்கின்றன. ஆரோக்கிய உணவு தயாரிக்க, 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' பகுதியில் கற்று வருகிறேன். சிறுகதைகள் உரைக்கும் நீதி நல்வழிப்படுத்துகிறது. படக்கதை, தொடர்கதை சுவாரசியமும், விறுவிறுப்பும் நிறைந்துள்ளன.கவலையை போக்கும் மருந்தாகிறது 'மொக்க ஜோக்ஸ்!' பகுதி. குழந்தைகளின் புகைப்படங்கள், வண்ணங்களாய், 'குட்டி குட்டி மலர்கள்!' பகுதியில் விருந்தளிக்கிறது. அனைத்து தரப்பினருக்கும் படிக்கும் ஆர்வத்தை துாண்டி, அறியாமை இருளை அகற்றுகிறது. நம்பிக்கை நட்சத்திரமாய் பிரகாசிக்கும், சிறுவர்மலர் இதழ் சேவை என்றென்றும் தேவை!- சி.குணா, சென்னை.தொடர்புக்கு: 79040 50917