பொன்னாங்கண்ணி கீரை துவையல்!
தேவையான பொருட்கள்:பொன்னாங்கன்னி கீரை - 1 கட்டுபச்சை மிளகாய் - 4பூண்டு - 10 பல்சின்ன வெங்காயம் - 10நல்லெண்ணெய், சீரகம், மிளகு - சிறிதளவுதேங்காய், கறிவேப்பிலை, புளி, உப்பு, கொத்தமல்லி தழை - தேவையான அளவு.செய்முறை:வாணலியில் நல்லெண்ணெய் சூடானதும், நறுக்கிய பொன்னாங்கண்ணி கீரை, துண்டாக்கிய பச்சை மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை போட்டு வதக்கவும்.நன்கு ஆறியதும், துருவிய தேங்காய், சீரகம், மிளகு, புளி, உப்பு சேர்த்து அரைக்கவும். சுவை மிக்க, 'பொன்னாங்கன்னி கீரை துவையல்!' தயார். சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்!- என்.பசுபதி, திருப்பூர்.