மாமல்லபுரம்!
மாமல்லபுரம் கடற்கரை கோவில், முதலாம் நரசிம்மவர்ம பல்லவனால் கட்டப்பட்டது. தொல்பொருள் ஆய்வு துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இக்கோவில், 45 அடி உயரம் உடையது. கி.பி., 8ம் நுாற்றாண்டில் கருங்கற்களால் கட்டுமானம் செய்யப்பட்டது. வங்க கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது.இக்கோவில் உருவான போது, இந்த இடம் துறைமுகமாக செயல்பட்டது. தொன்மையான மாமல்லபுரம் சிற்ப தொகுதியை தற்போது, சர்வதேச நிறுவனமான யுனெஸ்கோ, உலக பாரம்பரிய சின்னமாக பாதுகாத்து வருகிறது.- வி.கவுதம சித்தார்த்