உள்ளூர் செய்திகள்

வாழ்வுக்கு ஊக்கம்!

விருதுநகர் மாவட்டம், சாத்துார், இந்து நாடார் எட்வர்டு உயர்நிலைப் பள்ளியில், 1962ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்தேன். வகுப்பு ஆசிரியர் என்.வி.சுப்பிரமணிய ஐயர் ஆங்கில இலக்கணத்தை புரியும் விதமாக விளக்குவார். தக்க உதாரணங்களை கூறுவார்.ஆண்டு இறுதியில், மாதிரி தேர்வு ஒன்றை நடத்துவர். அதில் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத அனுமதிப்பர். ஆங்கில பாடத்தில் சரியாக, 35 மதிப்பெண்கள் தான் பெற்றேன். இது கண்டு, 'பொதுத்தேர்வில் கட்டாயம், 50 மதிப்பெண்களுக்கும் அதிகமாக வாங்குவாய். மனம் ஊன்றி படி...' என நம்பிக்கையூட்டினார் ஆசிரியர்.அதை மனங்கொண்டு கவனமுடன் படித்து, 54 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். அந்த ஆசிரியரின் எளிமையான நடத்தை முன்மாதிரியாக கல்லுாரி படிப்பின் போதும் உறுதுணையாக இருந்தது. எனக்கு, 77 வயதாகிறது. தனியார் நிறுவனத்தில் கரஸ்பான்டன்ஸ் டைப்பிஸ்டாக பணி செய்கிறேன். இன்று அந்த ஆசிரியர் மறைந்து விட்டாலும், அவர் ஊட்டிய ஆக்கமும், ஊக்கமும் வாழ்வின் உயர்வுக்கு பயன்படுகிறது.- ஏ.எஸ்.எஸ்.ராமலிங்கம், சிவகாசி.தொடர்புக்கு: 94873 68295


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !