உள்ளூர் செய்திகள்

மென்மை!

துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம், வீரப்பட்டி நேதாஜி உயர்நிலைப் பள்ளியில், 1955ல், 8ம் வகுப்பு படித்தேன். ஆங்கில பாட ஆசிரியர் கணேசன் ஐயர், யாரையும் அடிக்கவோ, திட்டவோ, கடிந்து கொள்ளவோ மாட்டார்.அவரது வகுப்பு நேரத்தில், வெளியே சென்று விடுவேன். இதை கவனித்து என்னை அழைத்து, 'தம்பி... என் பாடங்களை கேட்காமல் சென்று விடுகிறாயே, ஏன்...' என மென்மையாக கேட்டார்.தயக்கம் நீங்கி, 'ஐயா... ஆங்கிலம் எனக்கு புரியவில்லை. அது, அந்நிய மொழி. அதனால், அதைப் படிக்க விரும்பவில்லை...' என பதிலளித்தேன். சிரித்தவாறே, 'தமிழ் மொழி மீது அவ்வளவு பற்று உடையவனா நீ... பரவாயில்லை. ஆனாலும், பிறமொழிகளை கற்றால், எதிர்காலத்தில் எங்கு வேண்டுமானாலும் பிழைக்க உதவி செய்யும்...' என அறிவுரைத்து, வகுப்பில் அமர வைத்தார்.அதை ஏற்று நன்றாக படித்து உயர்ந்து ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பொறுப்பு வகித்த போது தான், அந்த ஆசிரியர் கூறிய அறிவுரையின் அருமையும், முக்கியத்துவமும் புரிந்தது.தற்போது எனக்கு, 85 வயதாகிறது; படிப்பில் கொண்டிருந்த தவறான அபிப்ராயத்தை போக்கி, விரிவாக சிந்திக்க வழிவகுத்த அந்த ஆசானை, நெஞ்சில் ஏந்தி வணங்கி மகிழ்கிறேன்.- சு.சங்கர சுப்பிரமணியன், துாத்துக்குடி.தொடர்புக்கு: 80567 68856


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !