மசாலா அவல்!
தேவையான பொருட்கள்:அவல் - 1 கப்எலுமிச்சைபழம் - 1கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை, வேர்க்கடலை, தனியாபொடி கலவை - 2 தேக்கரண்டி.சமையல் எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, வறுத்த மிளகாய் பொடி, மசாலா துாள், பெருங்காயத் துாள், உப்பு - தேவையான அளவு.செய்முறை:அவலை சுத்தம் செய்து, ஐந்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து, வடித்து வைத்துக்கொள்ளவும். கடலை பருப்பு, பொட்டுக்கடலை, வேர்கடலை, தனியா ஆகியவற்றை தனித்தனியே வறுத்து, பொடி செய்து கொள்ளவும்.இலுப்பச்சட்டியில் தாளித்து, கடலைப் பொடி கலவை, மிளகாய்பொடியுடன், ஊறிய அவலையும் போட்டு நன்கு கிளறவும். இதனுடன், மசாலா பொடி, பெருங்காயப் பொடி, உப்பு போட்டு கலக்கவும்.இந்த கலவையில், எலுமிச்சை பழச்சாறு பிழிந்து பரிமாறவும். சுவையான, 'மசாலா அவல்' தயார். இது, சத்துமிக்க மாலை நேர உணவு. குழந்தைகள் விரும்பி உண்பர். - லலிதா சீனிவாசன், சென்னை.