உள்ளூர் செய்திகள்

முளைக்கீரை பால் மசியல்!

தேவையான பொருட்கள்:முளைக்கீரை - 1 கட்டுஎண்ணெய் - 100 கிராம்மிளகாய் வற்றல் - 3பால் - 1 மேஜைக்கரண்டிகடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி.செய்முறை:முளைக்கீரையை, நன்றாக கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில், எண்ணெய் ஊற்றி, சீரகம், உளுந்தம் பருப்பு, கடுகு, மிளகாய் வற்றல் போட்டு, தாளிக்கவும்.பின், நறுக்கிய கீரையைப் போட்டு, உப்பு சேர்த்து கிளறவும். இந்த கலவையை, நன்கு மசியும் வரை வேக வைத்து, கடையவும். கீரை குழைந்ததும், பால் ஊற்றி, மீண்டும் கடைந்து இறக்கவும். சத்துமிக்க, 'முளைக்கீரை பால் மசியல்' தயார். மதிய உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.இந்த மசியல் வாசனை, நாவில் எச்சில் ஊற வைக்கும்; குழந்தைகள் விரும்பி உண்பர்.- கா.திவ்யா, திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !